என் மலர்

  செய்திகள்

  ஜஸ்டின் ட்ரூடோ
  X
  ஜஸ்டின் ட்ரூடோ

  வைரலாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீடியோ - அது உண்மை தானா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயனாளிகளுக்காக இதை செய்ததாக வீடியோ வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் இதன் மூலம் உலக நாடுகள் முழுக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

  இந்நிலையில், கனடா நாட்டு பிரதமர் தனது நாட்டு மக்களுக்காக நிவாரண பொருட்களை விநியோகம் செய்ய உதவுகிறார் என்ற வாக்கில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவுடன், ட்ரூடோ மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உதவுகிறார், இங்கு மோடி மக்களை கை தட்டி, விளக்கேற்ற சொல்கிறார் என்ற வாக்கில் தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

  வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரம்ஜான் பரிசு பொருட்களை பெட்டியில் வைக்க உதவினார். இவற்றை கனடாவை சேர்ந்த முஸ்லீம் நல அமைப்பு விநியோகம் செய்தது. 

  வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

  எனினும், வைரல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது என நினைத்து பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனை பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோவை உற்று கவனிக்கும் போது, வீடியோவில் உள்ள யாரும் முகக்கவசம் அணியவில்லை என்பதை பார்க்க முடியும். மற்ற நாடுகளை போன்றே கனடாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

  மேலும் வீடியோவில் முஸ்லீம் நல அமைப்பின் லோகோ காணப்படுகிறது. இத்துடன் பிரதமர் ட்ரூடோ அங்கிருந்தவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவிப்பதை காண முடிகிறது. அந்த வகையில், வைரல் வீடியோவுக்கும் கொரோனா நிவாரண பணிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

  போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
  Next Story
  ×