என் மலர்

  செய்திகள்

  கேரள முதல்வர் பினராயி விஜயன்
  X
  கேரள முதல்வர் பினராயி விஜயன்

  மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம்- பினராயி விஜயன் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் மக்கள் பிரதிநிதிகளின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். 

  இந்நிலையில், கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.

  இதேபோல் மாநில மந்திரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் மாத சம்பளத்தில் 30 சதவீதம் ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

  இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனா வைரசின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டும் வகையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு மாத ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்’ என்றார்.
  Next Story
  ×