search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமர்நாத் பனிலிங்கம்
    X
    அமர்நாத் பனிலிங்கம்

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - அமர்நாத் யாத்திரை ரத்து?

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
     
    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடையும் என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, ஜம்மு காஷ்மீர் ராஜ்பவன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரையை தொடர முடியுமா என ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×