என் மலர்

  செய்திகள்

  அரவிந்த் கெஜ்ரிவால்
  X
  அரவிந்த் கெஜ்ரிவால்

  அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை - அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா வைரஸ் தொற்றினால் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 28 பத்திரிகையாளர்களுக்கும், மும்பையில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த 53 பேரும் கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தது அச்சத்தை அதிகரித்துள்ளது.

  இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பான கேள்விக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிலில், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×