search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    தொழில் அதிபர்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துரையாடல்

    முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு தொழில் அதிபர்களுடன் கொரோனா நீட்டிப்பு மற்றும் அதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.
    மும்பை :

    மராட்டியத்தில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் பொருளாதாரத்தையும், தொழில்துறைகளையும் முடக்கி உள்ளது. இந்தநிலையில், நேற்று முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு தொழில் அதிபர்களுடன் கொரோனா நீட்டிப்பு மற்றும் அதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

    இதில் பட்னாவிசுடன் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் பவன் கோயங்கா, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் அதுல் ருயா, ரேமன்ட்ஸ் குழுமத்தின் கவுதம் சிங்கானியா, ரகேஜா குழுமத்தின் ரவி ரகேஜா, திரைப்பட துறை சார்பில் சித்தார்த் ராய் கபூர், எல் அண்டு டி நிறுவனத்தின் அனுப் சகே உள்ளிட்டோர் பங்கேற்று கலந்துரையாடினர்.

    கலந்துரையாடலின் போது தொழில் அதிபர்கள், தற்போது உள்ள இக்கட்டான சூழலில் உள்ள சவால்களையும், இடையூறுகளையும் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து செயல்படுவேன்” என்றார்.
    Next Story
    ×