search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிசங்கர் பிரசாத்
    X
    ரவிசங்கர் பிரசாத்

    கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் - ஒன்றுபட்டு, உறுதியோடு கடமையாற்ற மத்திய மந்திரி வேண்டுகோள்

    கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டு, உறுதியோடு கடமையை ஆற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    சென்னை:

    மத்திய தகவல் தொடர்பு, சட்டம் நீதித்துறை மற்றும் மின்னணு-தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகப்பெரிய தொற்றுநோய் பரவி வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகி, நாடு முழுவதையும் முடக்கி போடும் நிலைக்கு தள்ளிவிட்டது. இதுவரை கொரோனாவை முழுமையாக தீர்க்கும் மருந்தும் கண்டறியப்படவில்லை.

    இத்தகைய தருணங்கள் சவால் நிறைந்தவை. இருந்தபோதும் எந்த சவாலும் ஒரு வாய்ப்பையும் உருவாக்கிவிடும். ஏழை, பணக்காரர்கள்; உயர்ந்தவர்கள், சாமானியர்கள்; வெவ்வேறு சமயத்தினர்; இனத்தவர் என உலகின் அனைத்து மனிதர்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் புதிய தீர்மானமும், பொறுப்பும் உள்ளன.

    பிரதமர் நரேந்திரமோடி, மக்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் நாட்டு மக்களுக்கு அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகிறார். மக்களும் அதை ஏற்று செயல்படுகிறார்கள்.

    கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இப்போதைய நெருக்கடியான சூழலில், மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்துடன் ‘கோவிட் 19’ தொற்றினால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்காக ஆபத்தான நிலையில் களத்தில் இருந்து பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர், துணை மருத்துவர்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைதட்டும்படியும் கேட்டு கொண்டார்.

    அதையடுத்து, நாடு முழுவதும் பொது முடக்கத்தை 21 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற அசாதாரண நடவடிக்கையை அவர் எடுத்தார். இந்திய மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக அவரது வேண்டுகோளை தங்களது கடமையாகவே ஏற்று தங்களது இல்லங்களிலேயே தங்கினர்.

    இதனிடையில் அவரது இன்னோர் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் விளக்குகளையும் தீபங்களையும் ஏற்றி, சவாலான தருணத்தில் ஒற்றுமையையும் சக்தியையும் நிலைநாட்டினர்.

    கொரோனா வைரசுக்கு எதிரான நமது போராட்டத்தை மேற்கொள்ளும் இந்த சவாலான சமயத்தில் நாம் ஒன்றுபட்டு, உறுதியோடு நமது கடமைகளை ஆற்றினால், நம் நாடு வெற்றி காணும். அதையடுத்து நாம் ஒன்றுபட்டு செயல்பட்டு, தேசத்தை உச்ச சாதனை நிலைக்கு இட்டு செல்லலாம்.

    நமது பிரதமர் நரேந்திர மோடியின் பல முன் முனைப்புகளும், சில மாநில அரசுகளின் முயற்சிகளும் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. நிச்சயம் இந்த சோதனையை வென்று வருவோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×