search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5ஜி
    X
    5ஜி

    கொரோனா பரவலுக்கு 5ஜி தான் காரணமா?

    கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.



    கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக இங்கிலாந்தில் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்போன் கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.

    மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி தான் காரணம் என கூறும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், 5ஜி நெட்வொர்க் மற்றும் உலகெங்கும் பரவும் கொடிய தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மொபைல் போன்கள் மற்றும் செல் டவர்கள் எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதா ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்களில் ரேடியோ சிக்னல்களை அனுப்புகின்றன. அவை மனித செல்கள் மற்றும் டி.என்.ஏவை சேதப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு என அவை வகைப்படுத்தப்படுகின்றன.

    இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த வீடியோவை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து வீடியோக்களையும் நீக்குகிறது.

    அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவ 5ஜி காரணமில்லை என உறுதியாகி விட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×