search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    பிரதமர் நிவாரண நிதிக்கு இவர் ஒரு கோடி கொடுத்தாரா?

    கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு இவர் ஒரு கோடி கொடுத்து இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.



    டெல்லி நிசாமுதீன் தப்லிகி ஜமாத் தொழுகையில் ஈடுபட்ட பலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழுகை பற்றிய விசாரணையை மேற்கொள்ள போலீசார் தப்லிகி ஜமாத் தலைவர் மௌலானா சாத்துக்கு நோட்டீஸ்களை அனுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு மௌலானா சாத் ஒரு கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக நியூஸ் லெட்டர் எனும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.  

    வைரல் தகவலுடன் இணைக்கப்ப்ட நியூஸ் லெட்டர் மார்ச் 30 ஆம் தேதி அச்சிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி மௌலானா சாத் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக வைரல் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மௌலானா சாத் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படத்தில் உள்ள செய்தி மார்ஃபிங் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.  உண்மையில் நியூஸ் லெட்டர் ஆங்கில செய்தி வலைதளம், வடக்கு ஐயர்லாந்து பகுதியை சார்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் இந்த செய்தி வலைதளத்தில் இந்தியாவை சேர்ந்த முஸ்லீம் ஜமாத் தலைவர் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கியது பற்றிய செய்தியை முதல் பக்கத்திலேயே வெளியிடும் வாய்ப்புகள் குறைவு தான்.

    மேலும் செய்தி குறிப்பில் பிழைகள் இருப்பதை காண முடிந்தது. இதை கொண்டு செய்தியில் தவறு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. பின் நியூஸ் லெட்டர் வலைதளத்தை ஆய்வு செய்ததில் மௌலானா சாத் பற்றி மார்ச் 30 ஆம் தேதியில் எந்த செய்தி தொகுப்பும் கிடைக்கப்பெறவில்லை.  

    அந்த வகையில் மௌலானா சாத் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியதாக வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×