search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசங்கள் தயாரித்த ரெயில்வேத்துறை
    X
    முகக்கவசங்கள் தயாரித்த ரெயில்வேத்துறை

    முகக்கவசங்கள், சானிடைசர்களை தயாரிக்கும் வடக்கு மத்திய ரெயில்வே

    வடக்கு மத்திய ரெயில்வேயில் வேலைப்பார்க்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை பாதுகாக்க தானாகவே முகக்கவசங்களை தயாரிக்கின்றன.
    கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒருவேளை மருத்துவமனையில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ரெயில்வே பெட்டிகளை படுக்கைகள் கொண்ட தனி வார்டாக மாற்ற தயார் என ரெயில்வேத்துறை அறிவித்திருந்தது.

    அதனடிப்படையில் அனைத்து மண்டலங்களும் ரெயில்வே பெட்டிகளை படுக்கை வசதி கொண்ட வார்டாக மாற்றி வருகிறது. இந்நிலையில் தங்களது அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களை தாங்களாகவே தயாரித்துள்ளோம் என வடக்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடக்கு மத்திய ரெயில்வேயின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘இதுவரை 61 ஆயிரத்து 400 முகக்கவசங்கள் தயாரித்துள்ளோம். மேலும் 4 ஆயிரத்து 762 லிட்டர் சானிடைசர்ஸ் உற்பத்தி செய்துள்ளோம். இவைகள் அனைத்தும் எங்கள் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். முகக்கவசங்களை தினசரி தயாரித்து வருகிறோம். அலகாபாத், ஜான்சி, ஆக்ராவில் இந்த தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே ரெயில்வே நிலையங்கள் அருகில் உணவு இன்றி தவித்த மக்களுக்கு 23 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வினியோகித்துள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×