search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - மத்திய அரசு தகவல்

    கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  இந்த உத்தரவு கடந்த 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    ஆனாலும், நோய்க்கிருமி பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

    இந்தியாவில் கொரோனா பாதித்தோரில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  

    இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×