search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    இந்தியர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்- மருந்து ஏற்றுமதி குறித்து ராகுல் கருத்து

    இந்தியர்களின் தேவையைத் தாண்டி தான் மற்ற நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மருந்து தேவையை கருத்தில் கொண்டு பாராசிட்டமால், ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. 

    இதனால் அமெரிக்காவால், கொரோனா தடுப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

    ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். 

    இந்த சூழ்நிலையில், இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. 

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  

    ‘நட்பு என்பது பதிலடி குறித்த‌து அல்ல. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் உதவ வேண்டும். ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும்’ என ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×