search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் (கோப்புப்படம்)
    X
    விமானம் (கோப்புப்படம்)

    டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்ற 400 ரஷிய பயணிகள்

    இந்திய அரசிடம் அனுமதி பெற்று நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து 400 ரஷிய பயணிகளை அந்த நாட்டு சிறப்பு விமானம் அழைத்துச் சென்றது.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏராளமான நாடுகள் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன.

    இதனால் சுற்றுலா மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பிற நாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு சிக்கித்தவிப்பவர்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகள் சிறப்பு விமானம் மூலம் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

    அதன்படி இந்திய அரசிடம் அனுமதி பெற்று நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து 400 ரஷிய பயணிகளை அந்த நாட்டு சிறப்பு விமானம் அழைத்துச் சென்றது. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலே குடாஷேவ் கூறுகையில், “இது எங்கள் நாட்டு பயணிகளை அழைத்து செல்லும் 4-வது விமானம் ஆகும்.



    இந்தியாவும், ரஷியாவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட தொடர்பில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×