search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    கொரோனா வைரஸ் பாதிப்பை பரப்ப இத்தனை பேர் டெல்லியில் கூடினரா?

    டெல்லியில் உள்ள நிசாமுதீன் மசூதியில் ஒன்று கூடி வழிபாடு நடத்தியவர்கள் கொரோனாவை பரப்ப அப்படி செய்ததாக தகவல் வைரலாகி வருகிறது.



    டெல்லி நிசாமுதீன் தப்லிகி ஜமாத் சார்பில் பிராத்தனைக்கூட்டம் மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், நிசாமுதீன் பிராத்தனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பிராத்தனைக்கூட்டத்தில் முழங்கால் முட்டியிட்டு பலர் ஒன்றுகூடி பிராத்தனை செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

    இத்துடன் பிராத்தனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்காக அங்கு ஒன்று கூடியதாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல் கொண்ட பதிவுகள் மக்கள் மனதில் வன்மையை ஏற்பட செய்யும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



    வீடியோவை ஆய்வு செய்ததில், இதே வீடியோ பல மாதங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ நிசாமுதீனில் எடுக்கப்பட்டதாக ரிதுவான் சௌமா என்பவர் ஜனவரி 29, 2020 அன்று தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்.

    அந்த வகையில் இந்த வீடியோ சமீபத்தில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இத்துடன் பிராத்தனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸ் பரப்ப அங்கு ஒன்றுகூடவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.  

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×