என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்
Byமாலை மலர்1 April 2020 4:18 PM IST (Updated: 1 April 2020 4:18 PM IST)
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×