search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
    X
    சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

    சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்தது- சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.761.50

    சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 65 குறைந்து ரூ. 761.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.61.5 முதல் ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தக்கவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

    குறைக்கப்பட்ட விலையின் படி, டெல்லியில் ரூ.805க்கு விற்பனையாகி வரும் சிலிண்டரின் விலை, ஏப்ரல் 1 முதல் ரூ.744க்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் ரூ.826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.714.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.774.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மேல், சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும். 
    Next Story
    ×