search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆந்திராவில் மொத்தம் 87 பேருக்கு கொரோனா- டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களும் பாதிப்பு

    டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
    ஐதராபாத்:

    டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்), தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 

    வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்களும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 

    மசூதியில் தங்கியிருந்த நபர்கள்

    இந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநாட்டில் பங்கேற்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பணிகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் என 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×