search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிஜாமுதீன் பகுதி மசூதியில் தங்கி இருந்தவருக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி
    X
    நிஜாமுதீன் பகுதி மசூதியில் தங்கி இருந்தவருக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி

    வெளிநாடுகளை சேர்ந்த தப்லிகி ஜமாத் அமைப்பினர் அனைவரையும் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு

    இந்தியாவில் மத போதனை செய்யும் நோக்கி இந்தியா வந்துள்ள தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டனர். 

    அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

    கூட்டத்தில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் என 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, சுற்றுலா விசா மூலம் 70 வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் தப்லிகி ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் மத போதகர்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மதபோதனை வேலைகளில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

    நிஜாமுதீன் மசூதியில் தங்கி இருந்த நபர்

    அவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷ் (493 பேர்), இந்தோனேசியா (472 பேர்), தாய்லாந்து (142 பேர்) ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.  

    தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்க்கும் அவர்களில் சிலர் கொரோனா அதிகம் பரவிவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதனால், ஒரு வேளை அவர்களில் யாரோனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அது பலருக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், இஸ்லாமிய மத போதனை நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான தப்லிகி ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தற்போது எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவலை சேகரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த மத போதகர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதானை செய்து வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்  அடுத்த விமானத்திலேயே அவர்கள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள்

    இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை வெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத போதக உறுப்பினர்கள் அனைவரையும் தப்லிகி ஜமாத் அமைப்பு கட்டுப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா சோதனையின் போது வெளிநாட்டு ஜமாத் மத போதகர்களுக்கு அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும் படி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.  
    Next Story
    ×