search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவச உடைக்கு பதில் டாக்டர்களுக்கு ரெயின்கோட்
    X
    கவச உடைக்கு பதில் டாக்டர்களுக்கு ரெயின்கோட்

    கவச உடைக்கு பதில் டாக்டர்களுக்கு ரெயின்கோட் - கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அவலம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ கவச உடையை தவிர வேறு எதையும் பாதுகாப்பு சாதனமாக அணிய கூடாது என்ற நிலையில், கொல்கத்தா டாக்டர்களுக்கு ரெயின்கோட் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளுக்கு அங்கு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, தொற்று நோய் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஒருசில கவச உடைகளே இருப்பதால் அவற்றை குறிப்பிட்ட டாக்டர்கள் அணிந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு ரெயின் கோட்டு வழங்கப்பட்டுள்ளது. 

    இதுசம்பந்தமாக மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வைராலஜி நிபுணர் அமிதா பாநாத் கூறும் போது, உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள்படி மருத்துவ கவச உடையை தவிர வேறு எதையும் பாதுகாப்பு சாதனமாக அணிய முடியாது. அதே நேரத்தில் ரெயின் கோட்டால் ஓரளவு இதை தடுக்க முடியும் என தெரிவித்தார்.  மேலும் கழுத்து பகுதியை மூடும் வகையில் சில மாற்றங்களை செய்து அவசர தேவைக்கு பயன்படுத்தி வருவதாகவும், இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

    Next Story
    ×