search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 6 பேர் பலி

    டெல்லியில் நடந்த முஸ்லிம் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேர் கொரோனா பாதிப்பில் தெலுங்கானாவில் பலியானார்கள்.
    புதுடெல்லி:

    மலேசியா, இந்தோனேஷியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மார்ச் நடுப்பகுதியில் ஒரு முஸ்லீம் மத அமைப்பான தப்லீ-இ-ஜமாஅத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மார்ச் 24 அன்று 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த காலகட்டத்திற்குப் பிறகும் 1,400 பேர் ஜமாஅத்தின் மர்க்காஜ் என அழைக்கப்படும் அமைப்பில் தொடர்ந்து தங்கியிருந்தனர்.

    இதில் ஒரு பகுதியாக இருந்த 300-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒன்பது பேருக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்து உள்ளது.

    தெலுங்கானாவில் உள்ள 6 பேரில், இரண்டு பேர் காந்தி மருத்துவமனையிலும், அப்பல்லோ மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, நிஜாமாபாத் மற்றும் கட்வாலிலும் தலா ஒருவர் இறந்தனர்.

    இந்த நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களை சிறப்பு குழுக்கள் அடையாளம் கண்டுள்ளன, அவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த பலர் மூன்று நாள் ஜமாத்தில் கலந்து கொண்டதாகவும், அவர்களில் பலர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த ஜமாத்தில் பங்கேற்ற அனைவரும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு தெலுங்கானாவுக்குச் சென்ற குறைந்தது 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

    டெல்லி காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தென்டெல்லி பகுதிக்குச் சென்றுள்ளன. ஏராளமான மக்களுக்கு இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

    Next Story
    ×