search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை பங்குச்சந்தை
    X
    மும்பை பங்குச்சந்தை

    சென்செக்ஸ் 1375 புள்ளிகள் சரிவு- நிப்டி 8300 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது

    கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்தது. சென்செக்ஸ் 1375 புள்ளிகள் சரிந்தன.
    மும்பை:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதுடன், கடும் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் உலகம் பேரழிவை எதிர்கொண்டு வருவதாகவும், பொருளாதார மந்தநிலைக்குள் தெளிவாக நுழைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் உலக பங்குச்சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய பங்குச்சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது குறியீட்டெண் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

    பிற்பகல் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 1,375.27 புள்ளிகள் சரிந்து 28,440.32 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 379.15 புள்ளிகள் சரிந்து 8281.10 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

    924 நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்தன. 1320 பங்குகள் சரிவடைந்தன. 168 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை பங்குச்சந்தையில் அதிக சரிவை சந்தித்த நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவன பங்குகள் 12 சதவீதம் அளவிற்கு சரிந்தன. இதேபோல் எச்டிஎப்சி, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன.
    Next Story
    ×