search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்லி, உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

    மராட்டியம், கேரளாவை தொடர்ந்து டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இம்மாத தொடக்கத்தில் முதன்முதலாக கேரளாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    தற்போது நாடு முழுவதும் 27 மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உள்ளது. கடந்த 3 நாட்களாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 130 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளம், மராட்டிய மாநிலங்களில் இந்த வைரசின் வீரியம் அதிகமாக உள்ளது.

    இந்த இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. நேற்று மராட்டியத்தில் 17 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று புதிதாக 20 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் நோயாளிகள் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் புதிதாக 23 பேரையும், உத்தரபிரதேசத் தில் 19 பேரையும் வைரஸ் தாக்கியிருப்பது நேற்று தெரிய வந்தது.

    இதனால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 80 ஆகவும் உயர்ந்தது.

    Next Story
    ×