search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
    X
    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

    வெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா மாநில முதல்வர் அறிவிப்பு

    தெலுங்கானாவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதை தடுக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த 25-ந்தேதியில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு வேலை செய்வதற்காக புலம் பெயர்ந்தவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் உள்ளனர்.

    டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் இந்த பட்டியலில் உள்ளனர். உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து நடந்தே சொந்த ஊர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாநில எல்லையில் திடீரென ஆயிரக்கண்கானோர் திரண்டனர். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தை இக்கூட்டம் தவிடு பொடியாக்கியது. இதில் யாராவது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பேராபத்து ஏற்படும்.

    இதை உடனடியாக தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலமும் வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை அங்கேயே கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் கெட்டுக்கொண்டது.

    இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாங்கள் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘தெலுங்கானாவில் வேலைப்பார்க்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு நாம்தான் பொறுப்பு. நம்முடைய குடும்பம் போன்று அவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் 12 கிலோ ரேசன் பொருட்களுடன் 500 ரூபாய் வழங்கப்படும். அவர்கள் யாரும் பீதியடைய வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×