search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பு வேலி அமைத்த கிராமங்கள்
    X
    தடுப்பு வேலி அமைத்த கிராமங்கள்

    கொரோனா முன்னெச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் தங்களது கிராமங்களுக்கு சீல் வைத்த பொதுமக்கள்

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என மேற்கு வங்காளத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் காட்டுத்தீ போன்று பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் உத்தரவை பின்பற்றவில்லை.

    இதனால் கொல்கத்தாவில் உள்ள புருலியா மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் தங்களது ஊர் எல்லைகளை தடுப்பு வேலி அமைத்து தடுத்துள்ளன. வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை என்று போர்டு வைத்துள்ளனர்.

    அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நகரம் செல்லும் கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல வேண்டும் எனவும், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தண்டோரா போட்டு மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×