search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரசின் படங்கள்
    X
    கொரோனா வைரசின் படங்கள்

    இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் படங்கள் வெளியீடு

    கொரோனா பாதிப்புக்குள்ளான கேரள மாணவியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கொரோனா வைரசின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதன் முதலாக கேரள மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இவர் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனா நாட்டின் வுகான் நகரில் இருந்து இந்தியா திரும்பியவர் ஆவார்.

    இவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கொரோனா வைரசின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.‘சார்ஸ்-சிஓவி-2’ எனப்படும் அந்த வைரசின் படங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வைரசானது கடந்த 2012-ம் ஆண்டில் பரவிய ‘மெர்ஸ்-சிஓவி’ வைரஸ், கடந்த 2002-ல் பரவிய ‘சார்ஸ்-சிஓவி’ வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக புனேயில் செயல்படும் தேசிய வைரலாஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    வைரசின் படத்தை வெளியிட்ட தேசிய வைரலாஜி நிறுவனத்தின் துணை இயக்குனர் அதானு பாசு கூறியதாவது:-

    கேரளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இதில் கண்டறியப்பட்ட வைரசின் மரபணு வரிசையானது, வுகானில் கண்டறியப்பட்ட வைரசின் மரபணு வரிசைமுறையை 99.98 சதவீதம் ஒத்திருந்தது. இந்த வைரஸ்கள் சராசரியாக 70-80 நானோமீட்டர் அளவில் வட்ட வடிவம் கொண்டவை என்றார்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைமை இயக்குனர் நிர்மல் கே.கங்குலி கூறியதாவது:-

    கொரோனா வைரசானது கிரீடம் போன்ற வெளித்தோற்றத்தை கொண்டது. கொரோனா என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று அர்த்தமாகும். தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்கள் ‘சார்ஸ்-சிஓவி-2’ வைரசின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்வில் முக்கிய பங்காற்றும். கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×