search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி
    X
    ரிசர்வ் வங்கி

    ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி

    வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    மும்பை:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

    அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

    ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மேலும் குறைக்கப்படுவதால் வங்கிகள் கடன் கொடுப்பதை ஊக்கப்படுத்தும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் மார்ச் 31 முதர்ல ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போதைய பொருளாதார தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே 25-ம் தேதி நிதிக்கொள்கை கூட்டம் தொடங்கி இன்று நிறைவடைந்தது. 

    நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களில் வட்டி குறைப்புக்கு ஆதரவாக 4 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வட்டி குறைப்பினால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×