search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரலாகும் ஒலிம்பிக் லோகோ
    X
    வைரலாகும் ஒலிம்பிக் லோகோ

    சமூக இடைவெளியை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக்ஸ் புதிய லோகோ

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சமூக இடைவெளியை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக்ஸ் லோகோ மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டோக்யோ ஒலிம்பிக்ஸ் 2020 உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், டோக்யோ ஒலிம்பிக்ஸ் லோகோ கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது. புதிய லோகோவில் வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காமல், தனித்தனியே இருக்கும் வகையில் காட்சியளிக்கிறது.

    புதிய லோகோ சமூக இடைவெளியை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில், அது போலியானது என தெரியவந்துள்ளது. வைரலாகும் புகைப்படம், சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வைரலாகும் ஒலிம்பிக் லோகோ பதிவு

    எனினும், ஒலிம்பிக்ஸ் கமிட்டி இந்த லோகோவை ஏற்றுக் கொண்டதாக எவ்வித தகவலும் இணையத்தில் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை ஒலிம்பிக்ஸ் லோகோ மாற்றப்பட்டு இருப்பதாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. 

    ஒலிம்பிக்ஸ் லோகோவில் ஐந்து வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டோக்யோ ஒலிம்பிக்ஸ் 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவருடத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.
    Next Story
    ×