search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேநீர்
    X
    தேநீர்

    கொரோனாவை சரி செய்ய இதை குடித்தால் போதுமா?

    கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய இதை குடித்தாலே போதும் என மருத்துவர் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்கள் 24x7 பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நகைச்சுவை தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில், தற்சமயம் வைரலாகும் பதிவுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவர் சில ஆய்வு அறிக்கைகளில் பார்த்து விட்டு கொரோனா வைரஸ்  பாதிப்பை சரி செய்வதற்கான தீர்வை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் கொரோனை வைரஸ் கிருமியை கொல்லும் பண்புகள் இரசாயண கலவைகள் தேநீரில் அதிகம் நிறைந்து இருப்பதாக மருத்துவர் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
    இதே தகவல்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த இணையத்தில் இதுபற்றிய தேடல் நடைபெற்றது.

    அதில் தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்துவிட முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய தேநீர் குடித்தால் போதும் என வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.
    Next Story
    ×