search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவராஜ் சிங் சவுகான்
    X
    சிவராஜ் சிங் சவுகான்

    மத்தியபிரதேச சட்டசபையில் சிவராஜ் சிங் சவுகான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

    மத்தியபிரதேச சட்டசபையில் சிவராஜ் சிங் சவுகான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்.
    போபால் :

    மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் காங்கிரசில் இருந்து விலகியதால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கமல்நாத் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் 4-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து சட்டசபை சிறப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ. ஜெகதீ‌‌ஷ் தேவ்டா தற்காலிக சபாநாயகராக அவையை நடத்தினார்.

    அப்போது முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தனது அரசின் மீது நம்பிக்கை கோரி ஒரு வரி தீர்மானத்தை கொண்டுவந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர். முதல்-மந்திரியின் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பா.ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

    முன்னதாக பா.ஜனதா கட்சி கொறடா, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    Next Story
    ×