search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரியாக பதவியேற்ற சவுகான்
    X
    முதல் மந்திரியாக பதவியேற்ற சவுகான்

    மத்திய பிரதேசத்தில் இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம்- மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் சவுகான்

    மத்திய பிரதேச சட்டசபையில் இன்று சிவராஜ் சிங் சவுகான் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில், கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.

    பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்று இரவு முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.  இதன்மூலம் 4வது முறையாக மத்திய பிரதேச முதல் மந்தியாக அவர் பொறுப்பேற்றுள்ளார். சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றபின்னர், சபாநாயகர் என்.பி.பிரஜாபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.  இக்கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். சட்டசபை கூடியதும் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    230 உறுப்பினர்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அக்கட்சியின் பலம் 92 ஆக குறைந்துள்ளது. தற்போது 24 உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 206 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×