search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு
    X
    முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு

    மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு

    கமல்நாத் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான்-ஐ பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை தேர்வு செய்துள்ளனர்.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார்.
     
    மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றதாக பின்னர் அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்தது. முதல் மந்திரி பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார்.

    போபாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    சமீபத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் போபாலில் இன்றிரவு 7 மணியளவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கவர்னர் மாளிகையில் இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையில் மீண்டும் அமையும் புதிய அரசில் நான்காவது முறையாக அம்மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்பவர் என்னும் சிறப்பை சிவராஜ் சிங் சவுகான் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    Next Story
    ×