search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே

    கேரளா, மகாராஷ்டிரா,பஞ்சாப் மாநிலங்களில் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு

    கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாத வகையில் கேரளா, மகாராஷ்டிரா,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை
    15 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து இன்று மாலை நிலவரப்படி 428 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாத வகையில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் இன்று நள்ளிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகளை சீல் வைக்கப்படும். அத்தியாவசியமான உணவுப்பொருள் சப்ளை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய ஊரடங்கின்போது வெறிச்சோடி காணப்பட்ட மும்பை நகரம்

    எதிர்வரும் சில நாட்கள் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை அனுமதிக்க முடியாது. அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

    இதேபோல், பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்றிரவு முதல் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

    கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அம்மாநிலம் முழுவதும் இன்றிரவு முதல் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகள் அடைக்கப்படும். வெளிமாநில வாகனங்கள் கேரளாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×