search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
    X
    பாஜக தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

    ஜே.பி.நட்டா முன்னிலையில் ம.பி. அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

    மத்திய பிரதேசத்தின் காங்கிரசில் இருந்து விலகிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் முதலில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்றதாக அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், மத்திய பிரதேச மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் இழைத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவித்தார்.

    இதற்கிடையே, பெங்களூரில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். 

    இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் டெல்லியில் உள்ள பாஜக தெசிய தலைவர் ஜே.பி.நட்டா வீட்டுக்கு சென்று, தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.
    Next Story
    ×