search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வர்ஷா கெய்க்வாட்
    X
    வர்ஷா கெய்க்வாட்

    மகாராஷ்டிராவில் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு

    மகாராஷ்டிராவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
    மும்பை :

    நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று மாநில பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மராட்டியத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை எஞ்சி உள்ள 2 பரீட்சைகள் நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். மற்ற ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.

    இவ்வாறு மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
    Next Story
    ×