search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் ராணுவ அதிகாரிக்கு கோப்பை வழங்கும் பிரதமர் மோடி (கோப்பு படம்)
    X
    பெண் ராணுவ அதிகாரிக்கு கோப்பை வழங்கும் பிரதமர் மோடி (கோப்பு படம்)

    நீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தண்டனை அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் வழக்கு மேல் வழக்கு போட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பித்துவந்தனர்.

    இதற்கிடையில், அனைத்து சட்டவாய்ப்புகளும் வழங்கப்பட்ட பின்னர் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி திகார் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரும் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பிரதமர் மோடி தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ''நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. நமது பெண்களின் சக்தி எல்லா துறைகளிலும் சிறப்பாக உள்ளது. பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாட்டை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்’’ என மோடி டுவிட் செய்துள்ளார்.

    Next Story
    ×