என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசிநேர வாதமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
Byமாலை மலர்19 March 2020 10:43 PM GMT (Updated: 19 March 2020 10:43 PM GMT)
நிர்பயா குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி நள்ளிரிவு பவன் குப்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.
நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.
குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.
இதனால், வெள்ளிக்கிழமை காலை திஹார் சிறையில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மேல்முறையீடு செய்தார்கள்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.
அதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்
அதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ இன்று ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது.
நீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்
இதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.
இதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார். மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டது.

Next Story
×