search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ அலுவலகம்
    X
    சிபிஐ அலுவலகம்

    2015-க்கு பிறகு சிபிஐ அமைப்பில் 5000 வழக்குகள் பதிவு

    சிபிஐ அமைப்பு 2015ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 5000 வழக்குகளை பதிவு செய்திருப்பதாகவும், 3700 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று சிபிஐ வழக்குகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். 

    அவர் தனது பதிலில், நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 5000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    ‘2015 ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2020 ஜனவரி 29ம் தேதி வரை, 4,300 வழக்கமான வழக்குகள் மற்றும் 685 பூர்வாங்க விசாரணைகள் என 4,985 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில், 4,717 வழக்குகளை விசாரித்து, 3,700 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டார். 
    Next Story
    ×