search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றவாளி பவன் குப்தா மற்றும் உச்சநீதிமன்றம் (கோப்பு படம்)
    X
    குற்றவாளி பவன் குப்தா மற்றும் உச்சநீதிமன்றம் (கோப்பு படம்)

    நிர்பயா வழக்கு: குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு தள்ளுபடி... நாளை தூக்கு உறுதி?

    நிர்பயா வழக்கு குற்றவாளி தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததையடுத்து நாளை தூக்கிலிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்  குற்றம் நடந்த போது தான் சிறுவனாக இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

    நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி

    இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதனால், நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நாளை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    குற்றவாளியின் மனு தள்ளுபடியானது குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியதாவது, ''குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் நிறைய வாய்ப்புகளை வழங்கியபோதும் அவர்கள் தூக்கு தண்டனையை தள்ளிவைக்கும் வேலைகளை செய்துவந்தனர். தற்போது குற்றவாளிகளின் தந்திரத்தை நீதிமன்றம் புரிந்துகொண்டுவிட்டது. எனது மகள் நிர்பயாவுக்கு நாளை நீதி கிடைக்கும்’’ என்றார்.
    Next Story
    ×