search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரண தண்டனை குற்றவாளிகள்
    X
    மரண தண்டனை குற்றவாளிகள்

    நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு தடைக்கோரி 4 குற்றவாளிகள் புதிய வழக்கு

    நிர்பயா கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி 4 குற்றவாளிகள் சார்பில் தொடரப்பட்ட புதிய வழக்கில் திகார் சிறைக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்துக்குள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டதால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டுவருகிறனர்.

    இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் குற்றம் நடைபெற்ற 2012 டிசம்பர் 16-ம் தேதி தான் டெல்லியிலேயே இல்லை எனவும் குற்றம் நடந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 17) தன்னை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார். இதனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.

    தூக்கு மேடை

    அந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    டெல்லி கூடுதல் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் இன்று டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவின் மீது இன்று விசாரணை நடந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் சிங் என்பவர் இரண்டாவது முறையாக நேற்று ஜனாதிபதி ராம்நாத் சிங்குக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    இந்த மனுவின் மீது இன்னும் ஜனாதிபதி முடிவெடுக்காத நிலையில் தங்களை தூக்கிலிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன், வினய் ஷர்மா, அக்‌ஷய் சிங் ஆகியோர் சார்பில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

    இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு திகார் சிறை நிர்வாகம் மற்றும் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் மறுவிசாரணையை நாளைக்கு (19-ம் தேதி) ஒத்திவைத்துள்ளார்.

    Next Story
    ×