search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா மீதி காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பள்ளி மாணவ/மாணவிகள் (கோப்பு படம்)
    X
    கொரோனா மீதி காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பள்ளி மாணவ/மாணவிகள் (கோப்பு படம்)

    பரீட்சை எழுதாமல் பாஸ் ஆன உ.பி. மாணவர்கள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ/மாணவிகள் பொதுத்தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    லக்னோ:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட  உத்தரவிட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவிகளுக்கு வரும் 23 முதல் 28-ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தேர்வு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ/மாணவிகள் தேர்வு எழுதாமலேயே  அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஏப்ரல் 2-ம் தேதி வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

    Next Story
    ×