search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வாய்க்குள் குதித்த ராஜா குரேஷி
    X
    கால்வாய்க்குள் குதித்த ராஜா குரேஷி

    டிக்டாக் மோகம்: கால்வாய்க்குள் குதித்து வீடியோ எடுக்க முயன்ற நபர் சம்பவ இடத்திலேயே பலி - வீடியோ

    டிக்டாக் மோகத்தால் கால்வாய்க்குள் குதித்து வீடியோ எடுக்க முயன்ற நபர் தண்ணீரில் இருந்த பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குட்டும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா குரேஷி. 18 வயது இளைஞரான ராஜா டிக்டாக் செயலியில் விதவிதமாக வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது கிராமத்துக்கு அருகே உள்ள கங்கா கால்வாய்க்கு ராஜா தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். குளித்து முடித்த பின் ஒரு டிக்டாக் வீடியோ எடுக்கவேண்டும் என எண்ணிய அவர் மிகவும் ஆபத்தான முடிவு ஒன்றை எடுத்தார்.  

    அதன்படி, நண்பர்களை டிக்டாக்கில் வீடியோ எடுக்க சொல்லிவிட்டு கால்வாயின் மதகுகள் இருந்த இடத்திற்கு சென்ற அவர் அங்கிருந்தவாறு தண்ணீர் வேகமாக பாய்ந்து கொண்டிருந்த பகுதிக்குள் குதித்தார். 

    எதிர்பாராத விதமாக கால்வாயில் பாறைகள் அதிகம் இருந்த பகுதியில் ராஜா குதித்ததால் தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் ராஜாவின் நண்பர்கள் எடுத்துக்கொண்டிருந்த டிக்டாக் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதையடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையின் போது  இந்த சம்பவம் குறித்து எந்தவித புகாரும் கொடுக்காமல் ராஜாவின் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்துள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    Next Story
    ×