search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    ஆந்திராவில் வீடு தேடி வரும் பென்சன் திட்டம் - முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

    ஆந்திராவில் வீட்டிலேயே பென்சன் தொகையை பெற்ற மக்கள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    ஐதராபாத்:

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்து பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்காக அரசு சார்பில் தற்காலிக ஊழியர்கள் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

    நேற்று முதல் வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. பென்சன் வழங்குவதற்கு என்றே நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அதிகாலை 6 மணிக்கே பென்சன் வாங்கும் முதியோர், ஊனமுற்றோரின் வீடுகளுக்கு தேடி சென்று பென்‌‌ஷன் தொகையை வழங்கினார்கள். 50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் என்ற ரீதியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பென்சன் வழங்கப்பட்டது. இன்று மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் 80 சதவீத பயனாளிகளுக்கு பென்‌ஷன் வழங்கப்பட்டது. ஜெகன்மோகன்ரெட்டி முதல்வராக பதவியேற்றதும் பழைய ஓய்வூதிய முறை மாற்றியமைக்கப்பட்டு பென்சன்தாரர்களுக்கான பலன்கள் கூட்டப்பட்டன. பென்சன் தொகையும் உயர்த்தப்பட்டது.

    ஆந்திராவில் 60 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் என சுமார் 60 லட்சம் மக்களுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. முதியோருக்கு பென்சனாக 2250 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படுகிறது.மொத்தம் 1384 கோடி ரூபாய் பென்சன் திட்டத்துக்காக செலவிடப்படுகிறது.

    வீடுதேடி பென்சன் திட்டம் மூலம் முதியோர் ஊனமுற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பு பென்‌சன் தொகை வாங்க கிராம ஊராட்சி முதல் நகராட்சி அலுவலங்களில் மக்கள் காத்துகிடந்தனர். கொளுத்தும் வெயில் அல்லது மழையில் நின்று பென்‌சன் வாங்கி வந்தார்கள். சில நேரங்களில் இன்று கிடையாது நாளைக்கு வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள்.

    இப்படி அதிகாரிகள் முதியோர்களை பென்சனுக்காக பலமுறை அலைகழித்து வந்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சில ஊர்களில் முதியோர் உதவி தொகை வாங்க பேருந்தில் அல்லது ஆட்டோவில் பயணம் செய்து வர வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதை உணர்ந்தே ஜெகன்மோகன்ரெட்டி வீடு தேடி பென்சன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் வீட்டிலேயே பென்சன் தொகையை பெற்ற மக்கள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்தனர்.

    பென்சன் தொகை வாங்க கிராமம் முதல் நகரங்கள் வரை பஞ்சாயத்து அலுவலகம், நகரசபை, மாநகராட்சி அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதிருக்கும். மறுநாள் வாருங்கள் என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். சிக்னல் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் பலமுறை அலைகழித்து வந்தனர்.

    நடக்க முடியாதவர்கள் ஆட்டோவில் பலமுறை செல்வதால் கூடுதல் செலவு செய்யப்படுகிறது. இதற்கு பென்சன் தொகையில் பாதி செலவாகிவிடும். எங்களது கஷ்டங்களை உணர்ந்து வீட்டிற்கு தேடி வந்து பென்சனை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×