என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நோயாளியின் பணத்தை திருடியாக பழி சுமத்தியதால் நர்சு தூக்கிட்டு தற்கொலை
திருமலை:
சித்தூர் அடுத்த மதனப்பள்ளி வந்தாடிவாரிபள்ளியை சேர்ந்தவர் ராசப்பா. விவசாயி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 4 மகள்கள். இவர்களது 3-வது மகள் சாலம்மா என்ற சாவித்திரி (வயது24). பி.எஸ்.சி. நர்சிங் முடித்து விட்டு மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டாக நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாவித்திரி இரவு பணிக்கு சென்றிருந்தார். அப்போது சாவித்திரி பரிசோதனை செய்து கொண்டிருந்த வார்டில் உள்ள ஒரு நோயாளியின் ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை காணவில்லை.
இதுகுறித்து அந்த நோயாளி மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்தார். மருத்துவமனை நிர்வாகம் சாவித்திரியை அழைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் மருத்துவ மனையில் நோயாளி உடனிருந்த நோயாளியின் உதவியாளரும், ஊழியர்களும் பணத்தை சாவித்திரி தான் திருடியிருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இதனால் சாவித்திரி மனவேதனை அடைந்தார்.
விரக்தியில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதனப்பள்ளி போலீசார் சாவித்திரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாவித்திரி எழுதி வைத்திருந்த 4 பக்கம் கொண்ட உருக்கமான கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் திருட்டு பட்டம் சுமத்தியதால் மனவேதனையில் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார்.
தங்களது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாவித்திரியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.