என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாத்து திருடியதாக 5-ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை
திருமலை:
சித்தூர் மாவட்டம் பார்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த முருகாரெட்டி என்பவரின் வீட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களது மகன் வெங்கட்ராமுடு (வயது10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வெங்கட்ராமுடு பெற்றோரை பார்ப்பதற்காக முருகாரெட்டி வீட்டிற்கு சென்றான்.
அப்போது முருகாரெட்டி, அவருக்கு சொந்தமான வாத்தை திருடியதாக கூறி சிறுவனை அடித்து துன்புறுத்தியுள்ளார். மகனை அடிப்பதை பார்த்து விட்டு பெற்றோர் அவரை தடுத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினர். சிறுவன் மட்டும் அங்கேயே இருந்துள்ளான். வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் அவனை முருகாரெட்டி வீடு மற்றும் சுற்றுப்பகுதியில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள மணல் மேடுவில் சிறுவன் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தான். அவனை கொலை செய்து வீசியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
தனது மகனை முருகாரெட்டி தான் அடித்து கொலை செய்திருக்க வேண்டும் என்று கே.வி.பி.புரம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகாரெட்டியை கைது செய்தனர்.
மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.