என் மலர்
செய்திகள்

கவுன்சிலர் தாஹிர் உசேன்
டெல்லி வன்முறை - ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு
டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உளவுத்துறை அதிகாரியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story