search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகீரதி அம்மாள்
    X
    பகீரதி அம்மாள்

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற கேரளாவை சேர்ந்த பகீரதி அம்மாளுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, கேரளாவில் வசித்து வரும் பகீரதி என்ற பெண் 10 வயதாகும்போது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில் தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன் 4-ம் நிலை தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களை பெற்றார். அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற பகீரதி அம்மாள், அரசு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கார்டு அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்னிடம் ஆதார் கார்டு இல்லாததால் அவற்றைப் பெற முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

    இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற பகீரதி அம்மாளுக்கு இன்று ஆதார் கார்டு வழங்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், பகீரதி அம்மாளுக்கு ஆதார் கார்டுக்கான ஒப்புகை சீட்டு இன்று வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் ஆதார் கார்டு வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×