search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெஜி பாலசந்திரன்
    X
    ரெஜி பாலசந்திரன்

    350 தோட்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் கைது

    திருவனந்தபுரம் அருகே ஆயுதப்படை போலீஸ் முகாமில் இருந்த 350 தோட்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜி பாலசந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள தேரூர்கடையில் ஆயுதப்படை போலீஸ் முகாம் உள்ளது. இந்த ஆயுதப்படை போலீஸ் முகாமில் உள்ள ஆயுதங்களின் இருப்பு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் உள்ள துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்பட அனைத்து ஆயுதங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது இந்த முகாமில் இருந்த 350 தோட்டாக்கள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த தோட்டாக்களுக்கு பதில் போலி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆயுதப்படை போலீஸ் முகாமில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மாயமானது பற்றி, அப்போது அங்கு பணியில் இருந்த 11 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பல போலீசார் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் தோட்டாக்கள் மாயமான வழக்கில் அடூர் ஆயுதப்படை போலீஸ் முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள ரெஜி பாலசந்திரன்(வயது52) என்பவரை தற்போது போலீசார் கைது செய்து உள்ளனர்.

    மாயமான தோட்டாக்களுக்கு பதில் போலி தோட்டாக்களை வைத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைதான ரெஜி பாலசந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதைத்தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு டி.ஐ.ஜி. தோமஸ் கூறும்போது, ஆயுதப்படை முகாமில் இருந்து 350 தோட்டாக்கள் மாயமானது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜிபாலசந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். மாயமான தோட்டாக்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×