search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறையாளர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் வாகனங்கள்
    X
    வன்முறையாளர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் வாகனங்கள்

    வன்முறையை தூண்டும் பேச்சுக்காக எப்.ஐ.ஆர். இல்லை- டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்

    டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய புகார் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது இப்போது எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என காவல்துறை தெரிவித்தது.
    புதுடெல்லி:

    டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் பேசியதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். 

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, யார் மீதும் இப்போது எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என காவல்துறை தெரிவித்தது. 

    டெல்லி வன்முறை பாதிப்பு

    ‘தற்போதைய சூழலில் எப்ஐஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்த வகையிலும் உதவாது. அனைத்து வீடியோ பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறோம், அதன்படியே எப்ஐஆர் பதிவு செய்ய இயலும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.  வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 48 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெறுக்கத்தக்க பேச்சு என 3 உரைகளை மட்டுமே மனுதாரர் தேர்ந்தெடுத்து குற்றம்சாட்டியுள்ளர். ஆனால் இதுபோன்ற பல வெறுக்கத்தக்க பேச்சுகள் உள்ளன. இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு கட்சிக்காரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும். இயல்புநிலை மீட்கப்படும் வரை நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என்று காவல்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். 

    இந்த பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×