search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    நாட்டை பாதுகாப்பதற்காக எல்லை தாண்ட ராணுவம் தயங்காது- ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

    பயங்கரவாத அபாயத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, நமது படைகள் எல்லை தாண்டி செல்லவும் தயங்காது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு கா‌‌ஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள். இதற்கு பழிதீர்க்கும் வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி, பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய போர் விமானங்கள், பாலகோட் என்ற இடத்தில் இருந்த பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தன. பாலகோட் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவின் அணுகுமுறை பெருமளவு மாறி இருக்கிறது. பயங்கரவாத அபாயத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, இப்போது நமது படைகள் எல்லை தாண்டி செல்லவும் தயங்காது. கடந்த 2016-ம் ஆண்டின் துல்லிய தாக்குதலும், 2019-ம் ஆண்டின் பாலகோட் தாக்குதலுமே இதற்கு சாட்சிகள். இந்த மாற்றத்தை கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி. புதிய, நம்பிக்கையான இந்தியா உருவாகி வருவதையே இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×