search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிசபை
    X
    மத்திய மந்திரிசபை

    வாடகைத்தாயாக இருக்க கட்டுப்பாடு நீக்கம் - புதிய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தரும் பெண்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட தம்பதிக்கு நெருங்கிய உறவுக்கார பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும் என்று கூறும் மசோதா, கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததால், மாநிலங்களவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அக்குழு தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

    அந்த சிபாரிசுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விதவைகள், விவாகரத்து ஆன பெண்கள் ஆகியோரும் பலன் அடையலாம். இம்மசோதா, அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    37 மத்திய சட்டங்களை காஷ்மீருக்கும் பொருந்த செய்வது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ரூ.1,480 கோடி முதலீட்டில், தேசிய தொழில்நுட்ப ஜவுளி முனையம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
    Next Story
    ×