என் மலர்

  செய்திகள்

  ராஜஸ்தான் பஸ் விபத்து
  X
  ராஜஸ்தான் பஸ் விபத்து

  ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 24 பேர் பலியாகினர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் இருந்து சவாய்மதோபூருக்கு திருமண கோஷ்டியினர் ஒரு தனியார் பஸ்சில் சென்றனர்.

  இந்த பஸ்சில் மொத்தம் 40 பேர் இருந்தனர். பஸ் இன்று காலை 10 மணி அளவில் பந்தி பகுதியில் உள்ள மாகே ஆற்றின் மேல் பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.

  அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

  மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

  இதனால் பஸ்சில் இருந்த அனைவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

  இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 24 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
  Next Story
  ×